சீன கொரோனா அமெரிக்கா புகார்

அமெரிக்க குடியரசு கட்சியின் நாடாளுமன்ற வெளியுறவுக் குழு பிரதிநிதி மைக் மெக்கால் கொரோனா குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் வைரஸ் ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகளால்தான் உருவாக்கப்பட்டது. அங்கிருந்துதான் கசிந்ததது. வூஹான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை. மனிதரை தாக்கும் வகையில் கொரோனா வைரசை உருவாக்கவும், வெளியில் யாருக்கும் தெரியாமல் மறைக்கவும் பல முயற்சிகள் நடந்துள்ளன. இதற்கு பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் கிடைத்துள்ளன. 2019ல் வூஹான் ஆய்வகத்தில் அபாயகரமான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க 11 கோடி ரூபாய் நிதி  சீன அரசிடம் கோரப்பட்டுள்ளது. ஆய்வகம் செயல்படத் துவங்கி இரண்டு ஆண்டுகள்கூட முடிவடையாத நிலையில், அபாயகரமான கழிவுகளைக் கையாளும் வசதி தேவை என்ற கோரிக்கை கொரோனா வைரஸ் அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்த்துள்ளது. இதைத்தவிர மேலும் பல ஆதாரங்கள் உள்ளன’ என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.