உலக நாடுகள் அனைத்தும் எதிர்த போதிலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இதனை அந்நாட்டு மக்களேகூட ரசிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2018ல் கனடா காவல்துறையினர் ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஷோவை சில காரணங்களுக்காக கைது செய்தது. இதற்கு பதிலடியாக கனடாவின் தூதரக அதிகாரியான மைக்கேல் கோவ்ரிக்கை, உளவு பார்த்ததாக்க கூறி சீனா கைது செய்தது. அவர் மீது தற்போது ரகசிய விசாரணை நடைபெறுகிறது என கூறி கனடாவின் தூதரக முயற்சிகளை சீனா உதாசீனம் செய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட 26 நாடுகளைச் சேர்ந்த 28 தூதர்கள் பெய்ஜிங் நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டு மைக்கேல் கோவ்ரிக்கை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தனர்.