சண்டிகர் மேயர் பா.ஜ.க. வெற்றி

சண்டிகர் மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. அதில் ஆம் ஆத்மி கட்சி 14 வார்டுகளில் வெற்றி பெற்றது. பா.ஜ.க 12 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அங்கு மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. பா.ஜ.க வேட்பாளர் சரப்ஜித் கவுர் தில்லான் 14 வாக்குகள் பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 13 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 1 வாக்கு செல்லாத வாக்கு என அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், அகாலிதள் கட்சியினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. துணை மேயர் பதவியையும் பா.ஜ.க வென்றுள்ளது.