இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்றும், இந்த தொற்று பரவலின் போது, வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து அதனால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.இந்த சூழலில், இதை குறித்து கருத்து தெரிவித்த நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், ‘குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், லேசான அறிகுறிகளே தென்படும்.சாதாரண காய்ச்சல், சளி போல வந்து சரியாகி விடும்’ என்றார். ‘கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுவதற்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை, எனவே, குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை; யாரும் அச்சப்பட தேவையில்லை’ என, குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.