உலக அளவில் புகழ் பெற்ற செய்தி நிறுவனமான கேபிள் நியூஸ் நெட்வொர்க் (சி.என்.என்) என்பது அமெரிக்காவின் பிரதான செய்தி ஊடகத்தில் ஒன்று. மக்களால் இடதுசாரி ஊடகமாக கருதப்படும் சி.என்.என், ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதத்தை இழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், முக்கிய பார்வையாளர்களாக கருதப்படும் 24-54 வயதுஉள்ளவர்களில் 47 சதவீத பார்வையாளர்களை அது இழந்துள்ளது. பிரைம் டைம் பார்வையாளர்களில் இந்த இழப்பு 36 சதவீதமாக உள்ளது. சி.என்.என் தொலைகாட்சியின் தாய் நிறுவனமான வார்னர் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் கிலார், கொரோனா தொற்றே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.