மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்தாலும் மமதா நந்திகிராமில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் மூன்று இடங்களை பிடித்த பா.ஜ.கவின் தற்போதைய மாபெரும் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத மமதா தலைமையிலான திருணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களும் அவர்களுக்குத் துணையாக பல முஸ்லிம் அமைப்பினரும் மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள ‘அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்’ என்ற மாணவர் அமைப்பின் கட்டடம் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது. மேற்குவங்கத் தேர்தலில் பூத் ஏஜெண்டாக செயல்பட்ட இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒரு பெண் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.
பல பா.ஜ.க அலுவலகங்கள் எரிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க மற்றும் ஹிந்து அமைப்பினரின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. பா.ஜ.க அல்லாத ஹிந்துக்களும் இவர்களின் தாக்குதல்களுக்கு தப்பவில்லை. அவர்களது வாகனங்கள், கடைகள் சூறையாடப்படுகின்றன. இதுவரை ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக பா.ஜ.கவுக்கு ஆதரவளித்த ஒரே காரணத்தால் அங்குள்ள பட்டியல் சமுதாய மக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். உயிர் பயத்தால் பலர் தங்கள் வீடுகளை விட்டு, வயல்கள், காடுகளில் சென்று ஒளிந்துகொண்டுள்ளனர்.
தனது கட்சியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு பேசிய மமதா தனது உரையில் இது குறித்து வாய் திறக்கவில்லை என்பதுடன் வன்முறைகளை நிறுத்த சொல்லி தனது கட்சியின் குண்டர்களுக்கு ஆணையிடவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
மேற்கு வங்க ஆளுனர் இது குறித்து அம்மாநில டி.ஜி.பி, கொல்கத்தா கமிஷனர்களை அழைத்துப் பேசி அமைதியை நிலைநாட்டவும், மக்களை அமைதி காக்க வலியுறுத்தும்படியும் கேட்டுக்கொண்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். உள்துறை அமைச்சகம் அம்மாநில முதல்வர் மமதா பேனர்ஜி, ஆளுனரிடம் அறிக்கையை கேட்டுள்ளது.