எல்லைச்சாமி சிலை உடைப்பு

தமிழகத்தில் தி.மு.க பதவியேற்றது முதல், கடந்த ஆறு மாத காலமாக கோயில்கள் உடைப்பு, ஹிந்து சாமி சிலைகளின் மீது மர்ம நபர்களின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்படி தொடர்ந்து ஹிந்து மதத்தின் மீதும் அதன் அடையாளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது தமிழகத்திலுள்ள ஹிந்துமத உணர்வாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி லயங்கரையிலுள்ள ஸ்ரீ சூடாமணி முனியாண்டவர் கோயில், அப்பகுதி மக்களுக்கு எல்லைக் கோயிலாக விளங்கி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன், இரவில் சில மர்ம நபர்கள் அக்கோயிலுள்ள ஸ்ரீ முனியாண்டவர் சிலையின் தலை துண்டித்துள்ளனர். சிலையின் மேல் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளும், புஷ்ப அலங்காரங்களும் கலைக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டு உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. ஈ.வே ராமசாமியின் சிலைக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க அரசு, தற்போது தொடர்ந்து சாமி சிலைகள் உடைக்கப்படும் விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கிறது என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.