மமதா பானர்ஜிக்கு கருப்பு கொடி

உத்தர பிரதேச தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பேரணியில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி  சென்றிருந்தார். அப்போது ஹிந்து யுவ வாஹினி அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற உரத்த முழக்கங்களுடனும், ‘மம்தா பானர்ஜி திரும்பிப் போ’ போன்ற முழக்கங்களுடன் கருப்புக் கொடி ஏந்தி மமதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கோபமடைந்த மமதா, தான் கலந்துகொள்ள திட்டமிட்ட பல நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டார். பல பிரிவினைவாத கட்சித் தலைவர்கள் போலவே, மமதா பானர்ஜிக்கும் ‘ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய்’ போன்ற என்ற கோஷங்கள் என்றாலே அலர்ஜி.  ஆனால் அவருக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய்’ கோஷங்கள் எழுப்பப்படுவது இது முதல் முறையல்ல.