‘பா.ஜ.க சார்பில், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எம்.என். ராஜா தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் பா.ஜ.க சார்பில் செய்யப்படும்’ என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.