மத்திய அரசு, மே 21ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 8 ரூபாயும் டீசல் 6 ரூபாயும் குறைந்தது. ஆனால் தமிழக அரசு, தான் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல விலை குறைப்பை செய்யாமல் மக்களை ஏமற்றி வருகிறது. இதனை கண்டித்த தமிழக பா.ஜ.க தலைவர் தலைவர் அண்ணாமலை, ‘தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில், மாவட்டங்கள் தோறும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதையும் ஏற்கவில்லையெனில் திருச்சியில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும்’ என கூறியிருந்தார். ஆனால், தமிழக அரசு, இதுவரை பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதையடுத்து, பா.ஜ.க குரலுக்கும் மக்கள் குரலுக்கும் செவி சாய்க்காத தி.மு.க அரசை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில் கட்சியின் அமைப்பு ரீதியாக, 60 மாவட்டங்களிலும் வரும் ஜூலை 5ம் தேதி உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.