பாரதிய பண்பாட்டு வகுப்பு

கல்வித்துறையில் சேவைபுரியும் ஆர்.எஸ்.எஸ்’ன் துணை அமைப்பான வித்யா பாரதி அமைப்பின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, பாரதிய பண்பாட்டு வகுப்பு என்பது பள்ளியிலும் பொது தளத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பாரதிய பண்பாட்டு வகுப்பில், வளரும் நமது குழந்தைகளுக்குத் தேவையான ஹிந்து சமய கதைகள், ஆன்மிக பெரியோர் வரலாறு, ஹிந்து வாழ்வியல் நெறிமுறை, பாரத நாட்டின் வீர வரலாறு, பண்புக் கதைகள் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த வகுப்பை தங்கள் பகுதியில் நடத்த ஆர்வம் உள்ள உள்ள கல்லூரி மாணவர்கள், குடும்பத் தலைவர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக சேவை எண்ணம் கொண்ட தன்னார்வலர்கள் வித்யாபாரதி, பாரதிய சம்ஸ்கார் கேந்திரம், தென் தமிழகம், 94896 90577 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது https://surveyheart.com/form/61738f90946b306b9df76225 என்ற கூகுள் பார்மிலும் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம்.