உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் கூட்டத்தொடரின் துவக்க நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ், ‘சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி கிடைப்பது, மக்களின் வருவாய் கடன், வட்டி விகிதங்களில் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. ஏழை நாடுகள் அதிக வட்டியை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. சர்வதேச அளவில் வட்டி விகிதங்கள் குறைந்தபோதும் ஏழை நாடுகளில் அவை குறையவில்லை. மக்களுக்கும் வணிகத்திற்கும் கடன் கிடைப்பதில் அங்கு சமத்துவமின்மை நிலவுகிறது. ஐரோப்பிய நாடுகளில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுக்கவில்லை என்பது கவலை அளிக்கிறது. எனினும், இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையேயும் சர்வதேச வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. இதில், அமெரிக்கா, சீனா, பாரதம் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன’ என தெரிவித்தார்.