பாரதம் வரும் அன்னபூரணி

கனடா, ரெஜினா பல்கலைக்கழகத்தின் மெக்கென்சி கலைக்கூடத்தில் ஒரு பெண் கடவுளின் சிலைஇருந்ததைக் கண்ட திவ்யா மெஹ்ரா என்ற கலைஞர் அச்சிலை பாரதத்தில் இருந்து கடத்திவரப்பட்டிருக்கலாம் சந்தேகம் எழுப்பினார். பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் அது வாரணாசியின் ராணியும் உணவுக் கடவுளுமான அன்னபூரணிதேவியின் சிலை என்பதும் 100 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாரத அரசின் நடவடிக்கையால் அச்சிலையை திரும்ப ஒப்படைக்க பல்கலைக்கழகம் முன்வந்தது. அதன் துணைவேந்தர் கடந்த நவம்பரில் பாரதத் தூதர் அஜய் பிசாரியாவிடம் சிலையை ஒப்படைத்தார். தற்போது அன்னபூரணி சிலையை பாரதம் கொண்டுவரும் நடைமுறைகளை கலாச்சாரத்துறை விரைவுபடுத்தியுள்ளது.