வழி நடத்தும் பாரதம்

உலகம், குறிப்பாக ஐரோப்பா, தென் கொரியா, சீனா போன்ற நாடுகள் கொரோனாவின் புதிய அலையை சந்தித்து வரும் நிலையில், பாரத்த்தில் அதன் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை சந்திக்கிறது. மேற்கத்திய  நாடுகள், அதன் அறிஞர்கள் எல்லாம் கொரோனாவை பாரதம் மிகச் சிறப்பாக கையாண்டதை ஒப்புக்கொள்ள போவதில்லை. இங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பிரிவினைவாதிகளின் மனநிலையும் இதுதான். இறப்பை அதிகப்படுத்திக் காட்டுவது, பொய் சொல்வது, நோய், அரசின் செயல்பாடுகள், தடுப்பூசியின் தரம் என அவர்கள் தொடர்ந்து சந்தேகம் தெரிவித்து வருவது அனைவரும் அறிந்ததே.

நீங்கள் நரேந்திர மோடியின் ரசிகராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், உலக அளவில் அவர்தான் கொரோனவுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று வழி நடத்துகிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. பாரதம் மூன்று கொரோனா அலைகளைக் கண்டுள்ளது. மத்திய அரசு இரண்டு தடுப்பூசிகளை உருவாக்க உதவியது, மேலும் பல மருந்துகளின் ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவியது.

மத்திய அரசு, கொரோனா தடுப்பூசியை தன் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. பல உலக நாடுகளுக்கும் ஐ.நா அமைதிப் படையினருக்கும்கூட தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இத்தனைக்கும் பாரதத்தின் மிகப்பெரிய மக்கள்தொகை, நெரிசலால் வேகமாக பரவும் தொற்று, கொரோனா பொதுமுடக்கம், அரசு வருவாய் இழப்பு, இலவச ரேஷன் பொருட்கள், பலவீனமான சுகாதார கட்டமைப்பு, சீனாவுடனான எல்லை பிரச்சனை, தேச வளர்ச்சி என அனைத்து பக்கங்களிலும் சவால்களை சந்தித்தபோதும் நமது மத்திய அரசு இதனை வெற்றிகரமாக சாதித்துள்ளது. உலகிற்கே இதில் முன்னுதாரணமாக திகழ்கிறது.

இது குறித்து படித்தறிய ஒரு நல்ல புத்தகம் வெளியாகியுள்ளது.  மும்பையில் வசிக்கும் டெலாவேர் பல்கலைக்கழகம் மற்றும் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் பிரியம் காந்தி – மோடி எழுதிய புத்தகம், இது குறித்து நாம் இதுவரை அறிந்திராத விஷயங்களையும், பிற நிகழ்வுகளின் அவசரத்தில் நாம் கடந்துவிட்ட பல விஷயங்களையும் சொல்கிறது. குறிப்பாக ஊடகங்கள் இதனை கட்டாயம் படிக்கலாம்.

‘பாதுகாக்க ஒரு தேசம்: கோவிட் நெருக்கடியின் மூலம் இந்தியாவை வழிநடத்துகிறது’ (A Nation To Protect: Leading India Through The Covid Crisis) பிரியம் காந்தி-மோடி. ரூபா பப்ளிகேஷன்ஸ். பக்கங்கள் 312. ரூ. 595.