தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் தகவல்களுக்கு இடையில், நமது மத்திய அரசு, இதுவரை 20 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகளை (20,28,09,250) மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.மேலும், கிட்டத்தட்ட 51 லட்சம் (50,95,640) தடுப்பூசிகள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மாநிலங்களுக்கு வினியோகிகப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களுக்கு செலுத்த மத்திய அரசு வினியோகித்த 1.84 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி மருந்துகள் (1,84,41,478)மாநிலங்களிடம் தற்போது கையிருப்பில் உள்ளன. மேலும், மாநிலங்களும் பிற தனியார் மருத்துவமனிகளும் தங்கள் தேவையில் 50 சதவீத தடுப்பூசிகளை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ள மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உலகிலேயே மிக வேகமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வரும் நாடு பாரதம்தான் என்பது உலக நாடுகளே ஒப்புக்கொண்ட உண்மை.