கொரோனா ஊரடங்கினால், உலகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்ட சூழலில், மாணவர்கள், இணையம் வழியாக கல்வி கற்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பாரதம், பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஸ்பெயின், உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கல்வி நிபுணர்கள், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களிடம் கருத்துக்களை பெற்று ஆய்வு செய்து ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஆன்லைன் கல்வி முறையில், 5க்கு, 3.3 புள்ளிகள் பெற்று, பாரதம் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. அதேசமயம், அனைவருக்கும் டிஜிட்டல் உபகரணங்கள் கிடைப்பதிலும், இணையதள இணைப்பு கிடைப்பதிலும் சில சிரமங்கள் உள்ளது. ஆன்லைன் கல்வி சீரழிவைத் தரும் என 71 சதவீத இந்தியர்கள் கருதுகின்றனர் எனவும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.