தேர்தலில் தோற்றுப்போனவர் மமதா பானர்ஜி. அவரது திருணமூல் காங்கிரஸ் குண்டர்கள் மமதாவை தோற்கடித்த கட்சியான பா.ஜ.கவின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், தலைவர்கள் என்று குறிவைத்துக் கொலை செய்வதும் பெண்களை காட்டுமிராண்டித்தனமாக மானபங்கப் படுத்துவதும் வெட்கக்கேடான முறையில் கடைகளைக் கொள்ளையடிப்பதும் எந்த அளவுக்கு அந்த மாநில மக்களை பீதியில் உறையச் செய்திருந்தால், சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் மாநிலத்தை விட்டு அகதிகளாக வெளியேறி அசாமில் தஞ்சம் புகுந்திருப்பார்கள்! அப்படி வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியல் சமூக சகோதர சகோதரிகள். அதிர்ச்சி தரும் இந்த விஷயத்தை சுட்டிக்காட்டிய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபளே, “விவரமான சமுதாய, சமய பெரியோர்கள் இந்த வன்முறையை கண்டனம் செய்ய வேண்டும், சுமுகமான சூழலை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களின் மன சமாதானத்திற்கு அனைவரும் வழி பார்க்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்துள்ளார். மமதாவின் கட்சி பெரிய அளவில் தேர்தல் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்து சுமுகமான சக வாழ்வு வாழ்வதை வலியுறுத்தும் பாரதிய பாரம்பரியத்திற்கு முற்றிலும் முரணான விதத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள ஜனநாயகத்திற்கேகூட முரணானது என்று தத்தாத்ரேய சுட்டிக்காட்டியுள்ளார்.