ராகுல் காந்தி பெரிய அரசியல் ஞானி, விஞ்ஞானி, அவருக்கு தெரியாதது எதுவுமில்லை. அ.தி.மு.க முகமூடியை கழட்டினால் பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸும் தெரியும் என்கிறார். தெரியட்டுமே, அதில் தவறேதும் இல்லை. இவரது பரம்பரை முகமூடியை கழட்டினால் என்ன தெரியும் என்று பார்ப்போமா?
ராகுலின் கொள்ளுப்பாட்டனார் நேருவின் முகமூடியை கழட்டினால் ராணுவ ஜீப் பேரத்தில் ஊழல் செய்த வி.கே கிருஷ்ண மேனன் தெரிவார். இவரது பாட்டி இந்திராவின் முகமூடியை கழட்டினால் பாரத ஸ்டேட் வங்கி ஊழல் நகர்வாலா தெரிவார். நகர்வாலா 60 லட்சம் நகர்த்தினார். அவரை உலகத்தில் இருந்து இந்திரா நகர்த்தினார். ராகுலின் அப்பா ராஜிவ் முகமூடியை கழற்றினால் போபர்ஸ் பீரங்கி ஊழல் தெரியும். இவர்து அம்மா சோனியாவின் முகமூடியை கழற்றினால் 2 ஜியில் ஒரு ஜி அல்லது ஒன்றரை ஜியாவது தெரியும். ராகுலின் முகமூடியை கழற்றினால்?
அரசியல் அஞ்ஞானம் வெளிப்படும்.