அம்மன் பெயர் கொண்ட ஊரான அழகியநாயகிபுரத்தின் பெருமையை மறைக்க அந்த ஊர்காரர்களுக்கே தெரியாத ஒரு சர்ச்சின் பெயரை சூட்டி ‘அழகியநாயகிபுரம் பேராலயம்’ என அரசு செலவில், சில அதிகாரிகளின் மறைமுக துணையோடு, நெடுஞ்சாலை வழிகாட்டி பலகையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பரவியது. இது ஹிந்து முன்னணி அமைப்பாளர்களின் கவனத்துக்கு வந்ததையடுத்து அந்த அமைப்பு ‘உடனடியாக பெயரை மாற்றாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்’ என்றும் அறிவித்தது. இதனால் அந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது. மக்கள் கண் முன்பாகவே ஒரு ஊரின் சரித்திரத்தை இவ்வளவு எளிதாக மாற்றி எழுத முடியும் என்றால், நமது முன்னோர்களின் சரித்திரத்தை எப்படி எல்லாம் இவர்கள் மாற்றி எழுதி இருப்பார்கள் என்ற அச்சம் மக்கள் மனதில் எழாமல் இல்லை.