பாரதத்தில் கொரோனா முதல் அலை பரவலின் முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்கியது தப்ளிக் ஜமாத் எனப்படும் பயங்கரவாத ஆதரவு அமைப்பு. இது, 1926ல் ஹரியானாவில் தொடங்கப்பட்ட ஒரு தீவிர பழமைவாத சுன்னி இஸ்லாமிய மிஷனரி இயக்கம். முஸ்லிம் மதத்தின் பழமைவாத நம்பிக்கைகள், சடங்குகள், உடைகள், தனிப்பட்ட நடத்தைகளை பின்பற்றுமாறு முஸ்லிம்களை இது வலியுறுத்துகிறது. உலகளவில் சுமார் 400 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்க அரசும் இந்த அமைப்பின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ரஷ்ய அதிகாரிகளும் தப்ளிக் ஜமாத்தின் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளனர். தப்ளிக் ஜமாத், அல்கொய்தா, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட ஜிஹாதி பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு இது ஒரு ஆட்சேர்ப்புக் களமாக உள்ளது என்று அரசியல் ஆய்வாளர் ஷிரீன் கான் புர்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், சௌதி அரேபியா அரசு தப்ளிக் ஜமாத்தை ‘பிரிவினைவாத குழு’ என்று வகைப்படுத்தி உள்ளது. இந்த குழுவின் தவறான வழிகாட்டுதல்கள், ஆபத்து குறித்து பொதுமக்களை எச்சரிக்குமாறு இமாம்களைக் சௌதி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தப்ளிக் ஜமாத்துடன் எந்த தொடர்பும் சௌதி ராஜ்யத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. தப்ளிக் ஜமாத்துடனான தொடர்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று. சமூகத்திற்கு அவர்களால் ஆபத்து உண்டாகும் என எச்சரித்துள்ளது.