அயோத்யா மண்டபம் வழக்கு

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் கடந்த 1954ம் ஆண்டு கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுப்பப்பட்டது. இதனையடுத்து ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கடந்த 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு சமீபத்தில் அயோத்யா மண்டபத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுத்தது. ஹிந்து அமைப்பினரும் பா.ஜ.கவினரும் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதன்படி, சங்கங்களின் கீழ் பதிவு செய்த ஸ்ரீ ராம் சமாஜ்ஜை கோயில் என்ற வரையரைக்குள் கொண்டு வர முடியாது. அயோத்யா மண்டபத்தை ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் தக்காரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஸ்ரீராம் சமாஜத்துக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணையை தொடர தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.