இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் 92 வயதில் காலமான புகழ்பெற்ற பாடகி லதா மங்கஷ்கரின் நினைவாக ‘லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது’ நிறுவப்பட்டது. இதனை நிறுவிய மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் ஸ்ம்ருதி பிரதிஷ்தான் அறக்கட்டளை, ‘நமது தேசம், அதன் மக்கள் மற்றும் நமது சமூகத்திற்கு அற்புதமான முன்மாதிரியான பங்களிப்புகளை செய்த ஒரு தனிநபருக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளது. ஆதன்படி, முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது பாரதப்பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை மும்பையில் வழங்கப்பட்டது. உஷா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விருதை பெற்றுக்கொண்ட பிரதமர், “லதா மங்கேஷ்கர், எனது மூத்த சகோதரி போன்றவர். அவர் சரஸ்வதி தாயின் அவதாரம். அவரது இசை, தேசபக்தியைக் கற்றுக்கொடுத்தது. அவரது குரல் தேசபக்தியை தூண்டியது” என கூறினார்.