குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ.க அரசு, சஹாரா இந்தியா ஹோம் கார்ப்பரேஷனுக்கு பயனளிக்கும் வகையில், ராஜ்கோட் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான நிலத்தை குடியிருப்பு பகுதியிலிருந்து தொழிற்சாலைக்கு மாற்றியதாகவும் இதில் ரூ. 500 கோடி ஊழல் நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுது. இதனையடுத்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுக்ராம் ரத்வா மற்றும் அவரது இரண்டு சகாக்களுக்கு விஜய் ரூபானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், எனது பதவிக்காலம் மிகவும் தூய்மையானது மற்றும் எங்கள் அரசாங்கம் வளர்ச்சிக்காக உழைத்தது. முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்கப் போவதில்லை. அவர்கள் 15 நாட்களுக்குள் 500 கோடி ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் அளிக்க வேண்டும்; இல்லையேல் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.