கோயிலில் கொள்ளை முயற்சி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மலைப்பகுதியில் பழமைவாய்ந்த ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இக்கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக சிலைகள் உள்ளது. இதனால் கோயிலுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலின் கருவறைக்கு செல்ல அக்கால அரசர்கள் 5 கதவுகள் அமைத்துள்ளனர். இக்கோயிலில், ஜனவரி 5 அன்று இரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 கதவுகளை தாண்டி உள்ளே சென்றுள்ளனர். சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க்குகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். 3வது கதவினை உடைக்க முற்பட்டபோது பாதுகாவலர்கள் நடமாட்டத்தால் அங்கிருந்து தப்பிச்சென்றனர். காவலர்கள் சம்பவம் தொடர்பாக அறநிலையத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறை அவ்விடத்தை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகிறது.