அகஸ்தியர் அருவி செல்ல தடை மட்டுமே முன்பு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பொதுமுடக்கத்தை பயன்படுத்தி, வருடம் முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவிக்கு நீர் வரும் பாதையை மாற்றப்பட்டுள்ளது. மேலும், கல்யாணி தீர்த்தத்தில் இருந்த ஸ்ரீ அகஸ்தியர், லோப முத்திரை சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதில் சில வேற்று மத வனத்துறையினர் ஈடுபட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது ஹிந்துக்கள் இடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்து தவறு செய்தவர்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்