‘இயேசு அழைக்கிறார்’ எனவும், ’இயேசு விடுவிக்கிறார்’ எனவும் விதம்விதமாகப் பதாகைகள் கட்டி, அந்நிய மதப் போர்வையில் ஹிந்துத் துவேஷ விஷம் பரப்பி, ஆட்டம் போடும் போதகர்கள் ஒருபுறம்; பாலியல் வக்ரம் உள்ளிட்ட குற்றவியல் செயல்களுக்காகத் தலைப்புச் செய்தியாகி வரும் கான்வென்ட்கள் மறுபுறம் என சராசரித் தமிழனைத் திகைக்கச் செய்யும் மதமாற்ற வியூகத்தைத் தகர்த்தெறிவது எப்படி? ஒரு நடை அருணாச்சலப் பிரதேசம் சென்று வருவோம், வாருங்கள்.
அருணாசலில் 2017ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு ஒரு புதிய அமைச்சகத்தை நிறுவியது. அதன் பெயர் ‘சுதேசி சமயங்கள் / கலாச்சார நிகழ்வுகள் அமைச்சகம்’. எதற்காக இப்படி ஓர் ஏற்பாடு? இந்த மாநிலத்தின் கதையை சற்றே கவனித்தால் புரியும்.
17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அருணாச்சலில் 35 சதவிகிதம் பேர் கிறிஸ்துவர்கள். அங்கே மிஷனரிகளின் மதமாற்ற வெறியாட்டம் எவ்வளவு ஆவேசமாக நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் புள்ளிவிவரம் கைகொடுக்கும்: 1971ல் அருணாச்சலப் பிரதேச மக்கள் தொகையில் கிறிஸ்துவர்கள் வெறும் 0.7 9 சதவிகிதம் தான். 1981ல் இது 4.32 சதவிகிதம் ஆக அதிகரித்தது 1991ல் 10.3 சதவிகிதம் ஆயிற்று. 2001ல் 18.7 2 சதவிகிதம் ஆனது. 2011ல் 30.26 சதவிகிதம் ஆகி இன்று 35 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது.
அருணாச்சல் பிரதேசத்தில் 1978ல் இயற்றப்பட்ட மதச் சுதந்திரச் சட்டம் அதாவது, மதமாற்றத்தைத் தடை செய்யும் சட்டம் இருக்கத்தான் செய்கிறது. அங்கே மிஷனரிகள் நுழைய முடியாது. வனவாசி மக்களைக் கிறிஸ்துவர்களாக்க முடியாது. ஆனாலும் எப்படி இவ்வளவு அட்டூழியம் நடக்க முடிந்திருக்கிறது? அதற்கு மிஷனரிகளின் குள்ளநரித் தந்திரம் கைகொடுத்தது. அருணாச் சலப் பிரதேசத்தை ஒட்டிய அசாம் மாநில ஊர்களில் மிஷனரிகள் தங்கள் பாசறைகளை அமைத்துக் கொண்டார்கள். அங்கிருந்து படிப்பு, மருந்து, பண உதவி என்று பலவிதங்களில் அருணாச்சல வனவாசி மக்களை ஆசை காட்டி தங்கள் மதத்திற்கு இழுத்தார்கள். மக்கள் தொகையில் கிறிஸ்தவ சதவிகிதம் அதிகரித்தது. 1978ல் பிறப்பிக்கப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம் அமல் செய்யப்படாமல் பரணில் கடாசப்பட்டது.- 2002ல் மதமாற்றத் தடைச் சட்டத்தைப் பிறப்பித்த ஜெயலலிதா மிஷனரிகளின் நெருக்குதல் காரணமாக அதை அமல் செய்யமாட்டேன் என்று 2004ல் அறிவித்தார் அல்லவா, அதுபோல.
அருணாச்சலப் பிரதேசம் 1987ல் பிறந்தது. அப்போதிலிருந்து இந்த மாநிலத்தைக் கட்டியாண்ட காங்கிரஸ், மதமாற்றம் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. எளிய வனவாசி மக்கள் தங்கள் வேர்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, சுதேசி சமயங்களைத் தொடர்ந்து பின்பற்றுகிறவர்களின் எதிரிகளாக மாற்றப்பட்டு, மாநிலத்திற்குள் வனவாசி மக்களிடையே விரோதம் வளர்வதற்கு உரமிட்டு வந்த கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதமாற்றிகள் கொழுத்து அலைந்தார்கள். குறிப்பாக, 1985 முதல் 1990 வரையிலான ஆண்டுகளில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் இது அமோகமாக அரங்கேறியது.
“அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது அருணாச்சல் வனவாசி மக்கள் கிறிஸ்துவ மதத்தை உதறி அவரவர் தாய்ச் சமயத்திற்குத் திரும்பி வருவது அதிகரித்திருக்கிறது” என்கிறார் அருணாச்சலப் பிரதேச லோக்சபா எம் பியும் மாநில பாஜக தலைவருமான தாபீர் காவ்.
அருணாச்சலப் பிரதேசத்தின் வனவாசி இளைஞர்களும் இளம்பெண்களும் சுதேசி சமயச் சடங்குகளைப் பின்பற்றவும் பரப்பவும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நல்ல விஷயம். புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘சுதேசி சமயங்கள் அமைச்சகம்’ இந்த மாநிலத்தின் வனவாசி சமயங்களான தோனி போலோ, அமிக் முத்தாய், நானி இந்த்தயா, ரங்பிரா ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பொதுவான நெறிகளை வகுத்துக் கொடுத்து சமய ரீதியாக வனவாசி மக்கள் ஒருங்கிணைய ஊக்கம் தந்து வருகிறது. வெளிநாட்டுப் பணபலத்துடன் மிஷனரி கலாச்சாரப் படையெடுப்பை எதிர்கொள்ள இது வலுவான ஒரு வியூகம். மிஷனரி அமைப்புகள் பெறும் அந்நியப் பணத்துக்கு மோடி அரசு கணக்குக் கேட்கத் தொடங்கியது பிரம்மாஸ்திரம் ஆனது.
“சுதேசி சமயப் பண்பாடு மாநில மக்களின் அடையாளம். பண்பாட்டின் அங்கமாக விளங்கும் சமயங்கள் எங்கள் மக்களின் வேர்கள் எனச் சொல்லலாம். வேர்கள் வலுப்பெறாமல் ஆரோக்கியமான, வலுவான மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் வளர்வது எப்படி?” எனக் கேட்கிறார் முதலமைச்சர் பெமா கண்டு.
மாநில சுதேசி சமயங்கள் நிகழ்வுகள் அமைச்சகம் சார்பில் சுதேசி சமயங்களின் பூசாரிகளுக்கான 15 நாள் பயிலரங்கு ஒன்றை பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் துவக்கி வைத்தார். மக்கள் பெருமிதம் கொள்ளும் வனவாசி சமயங்கள் தழைத்
தோங்க ’சுதேசி சமயங்கள் அமைச்சகம்’, மாநிலத்தின் தொன்மையான சமயங்களுக்கான பிரார்த்தனைக் கூடங்களை மாநிலம் நெடுக அமைத்துக் கொடுத்து வருகிறது. ‘மாநிலத்தை வேற்று மத ஆதிக்கத்திலிருந்து மீட்டே தீருவோம்!’ என்ற மாநில அரசின் திட சித்தத்தையே இது காட்டுகிறது.
ஆதாரம்: ஜெய்தீப் மஜும்தார் கட்டுரை ஸ்வராஜ்யா இணையதளத்தில்