கொரானாவுக்கு எதிரான போரில் நமது பாரத ராணுவம் முழு அளவில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே, விமானப்படையும் கப்பற்படையும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பது, மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களை அழைத்து செல்வது உள்ளிட்ட ஏராளமான பணிகளை 24 மணி நேரமும் செய்து வருகிறது. இந்தோ – திபெத் படைப்பிரிவு டெல்லியில் பெரிய மருத்துவமனையை கட்டி நிர்வகிக்கிறது. இவ்வகையில் தற்போது, யூனியன் பிரதேசமான காஷ்மீருடன் இணைந்து இந்திய இராணுவம் பத்கமில் ரங்கிரிதா எனும் இடத்தில் 250 படுக்கை வசதி கொண்ட கொரானா சிகிச்சை மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, அயர்லாந்தில் இருந்து பெறப்பட்ட ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள்கள் டெல்லி கண்டோன்ட்மென்டில் உள்ள ராணுவ தள மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது.