அகில பாரத துறவியர் பேரவை சார்பில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், நாகசக்தி பீடம் பாபுஜி அடிகளார் ஆகியோர் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஹிந்து சமய நம்பிக்கை, கலாச்சாரம், வழிபாட்டு முறை, கோயில்கள், கடவுள்கள், கடவுள் சிலைகள், ஹிந்து பெண்கள், தமிழ் கடவுளான முருகன், கந்தசஷ்டி கவசத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி நாத்திகவாதிகளும், ஹிந்து விரோத சக்திகளும் பொது மேடைகளில் அரசியல் கட்சிகளுடன் இணைந்து பேசிவருகின்றனர். இதனால் சிறுபான்மையினர் வாக்குகளை பெற முடியும் என்ற நம்பிக்கையில் அரசியல்வாதிகள் இந்த ஹிந்து விரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய ஓட்டு வங்கி ஹிந்து விரோத சக்திகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து வரும் தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். ஹிந்து கோயில்கள், கலாச்சாரத்தை பாதுகாக்கின்ற வகையிலும், ஹிந்து அறநிலையத்துறையை அரசிடமிருந்து மீட்டு சுதந்திரமான நேர்மையான அமைப்பின் மூலமாக நிர்வகிக்க வழிவகுக்கும் அரசியல் கட்சிக்கே ஹிந்துக்கள் வாக்களிக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.