பிரிட்டிஷ் பள்ளிகளில் ஹிந்து விரோத வெறுப்பு

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஹென்றி ஜாக்சன் சொசைட்டி என்ற பயங்கரவாத எதிர்ப்பு சிந்தனைக் குழு ‘பள்ளிகளில் ஹிந்து வெறுப்பு எதிர்ப்பு’ என்ற தலைப்பில், நடத்திய ஆய்வில் வெளியான தகவல்களின் அறிக்கையை வெளியிட்டது. இதில், பிரிட்டிஷ் பள்ளிகளில் பிரிட்டிஷ் பள்ளிகளில் இந்து விரோத வெறுப்பு, இந்து மாணவர்களுக்கு எதிரான கொடுமைப்படுத்துதல், பாகுபாடு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஹிந்து மாணவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றுமாறு கொடுமைப்படுத்தியது, அவர்கள் மீது மாட்டிறைச்சி வீசப்பட்டது உள்ளிட்ட பல சம்பவங்களை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கு மேற்பட்ட ஹிந்துப் பெற்றோர்கள் (51 சதவீதம்) தங்கள் குழந்தைகள் பள்ளியில் ஹிந்து விரோத வெறுப்பை அனுபவிப்பதாகக் கூறியுள்ளனர். இங்கிலாந்தில், 16 வயது வரையிலான பள்ளிகளில் மதக் கல்வி (RE) கட்டாயமாகும். மேலும் இதனை இடைநிலைக் கல்விக்கான பொதுச் சான்றிதழ் (GCSE) பாடத்திட்டத்தில், பள்ளி மாணவர்களின் அனுபவத்தை மதிப்பிடுவதற்காக ஒரு தேர்வுத் தொகுதியாக எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

“இது பிரிட்டிஷ் பள்ளிகளில் ஹிந்துக்களுக்கு எதிரான பாகுபாடு அதிகமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. ஹிந்து விரோத வெறுப்பு பரவுவதை எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள், பள்ளிகளில் ஹிந்து அனுபவத்தைப் பற்றிய அதிக விழிப்புணர்வு மற்றும் புரிதலுக்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, மேலும் பிரிட்டனின் வகுப்பறைகளில் வெளிப்படும் குறைவான அறியப்படாத பிற வகையான தப்பான எண்ணங்கள் பற்றிய கூடுதல் ஆராய்ச்சியின் அவசியத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், வகுப்பறைகளில் காணப்படும் பாகுபாடுகளின் சில நிகழ்வுகள், லெய்செஸ்டரில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான அமைதியின்மையின் போது காணப்பட்ட வெறுப்புடன் ஒத்துப்போகின்றன. அவர்கள் ஹிந்துக்களின் சைவ உணவு உணொபது உள்ளிட்டபல்வேறு பழக்க வழக்கங்களை கேலி செய்வது, ஹிந்துக்களின் தெய்வங்களை இழிவுபடுத்துவது போன்ற பல இழிவான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் லெய்செஸ்டரில் ஹிந்து சமூகத்திற்கு எதிராக முஸ்லிம் அடிப்படைவாதிகளால் செய்யப்பட்டவை” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த அறிக்கையின் ஆசிரியர், சார்லட் லிட்டில்வுட், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாரதம் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து லெய்செஸ்டரில் பாகிஸ்தான் உல்ளிட்ட நாடுகளை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தால் பாரத சமூகத்தினர் மீது குறிப்பாக ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை மோதலை ஆய்வு செய்த பின்னர், தனது கவனத்தை பள்ளிகளுக்கு மாற்றினார். “நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால், ஆசிரியர்கள் இந்த பிரச்சனையில் விளையாடுகிறார்கள், இதில் ஹிந்து மதத்தினை குறைத்து கூறுவது மற்றும் சில இடங்களில் அவர்களது பாரபட்சமான பார்வைகள் ஆகியவையும் அடங்கும். நாம் ஒரு சமமான பிரிட்டனாக முன்னேற வேண்டுமானால், நமது வகுப்பறைகளில் உள்ள அனைத்து வகையான வெறுப்பையும் நாம் சரி செய்தாக வேண்டும்” என்று லிட்டில்வுட் கூறினார். கடைசியாக இந்த அறிக்கையில், ‘வெறுப்பு அடிப்படையிலான கொடுமைப்படுத்துதலை ஆவணப்படுத்துவது, மக்கள்தொகை மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான கருத்தாய்வுகளை நடத்துவது, பள்ளிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பது, ஹிந்து சமூகத்துடனான ஈடுபாடுகளை அதிகரிப்பது’ உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இங்கிலாந்து அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.