ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி தீவிர கிறிஸ்தவர் என்பதால் அவர், கிறிஸ்தவ சமூகத்தின் சேவைகளுக்கு அதிக செலவு செய்கிறார். அவர் ஆந்திராவின் முதலமைச்சராக ஆனதில் இருந்து மதமாற்ற நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறார். பல்வேறு கோயில்கள் அவரது ஆட்சியின்போது இடிக்கப்பட்டும் களவாடப்பட்டும் வருகின்றன என ஆந்திராவில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றம் சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. சமீபத்தில்கூட, பட்டியலின சமூகத்தை குறிவைத்து கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்குமாறு ஆந்திரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளருக்கு தேசிய எஸ்.சி. எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த சூழலில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, அறிவித்துள்ள ஒரு திட்டம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச பா.ஜ.க பொதுச் செயலாளர் விஷ்ணு வர்தன் ரெட்டி பகிர்ந்துள்ள அதுகுறித்த நோட்டீசில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள டுரோன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இலவசப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த ஹிந்து விரோத போக்கு குறித்து கேள்வி எழுப்பிய பா.ஜ.க தலைவர், “தேச வளங்களில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது. பிறகு ஏன் ஆந்திர முதல்வர் ஏன் 2 சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி ஹிந்து விரோத, ஒருதலைபட்ச நடவடிக்கையை கைவிட வேண்டும். ஆந்திர அரசு மாணவர்களுடன் மிகவும் கேவலமான அரசியலை விளையாடுகிறது. இது வகுப்புவாத பதட்டத்தை ஏற்படுத்தும். இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும்” என கூறியுள்ளார்.