ஹிந்து விரோத மனப்பான்மை

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் அமெரிக்க பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமீப காலமாக அமெரிக்காவில் ஹிந்து விரோத மனப்பான்மை அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில், அமெரிக்காவின் சில பகுதிகளில் பொது இடங்களில் ‘சிவப்பு புள்ளிக்கு இங்கு இடம் இல்லை’ என்று சில பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஹிந்துக்களில் பெண்கள் நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைப்பார்கள், ஆண்களும் செந்தூரம், சந்தனம், திருநீறு போன்றவற்றை வைப்பார்கள்.

இதனை குறிக்கும் விதமாகவே இந்த பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இவை, சில நட்களுக்கு முன் நடைபெற்ற ‘உலகளாவிய ஹிந்துத்துவத்தை அகற்றுவது’ என்ற மாநாடு தொடர்பான சமீபத்திய பிரச்சாரத்தின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். கடந்த 1970களில் நியூயார்க்,  நியூ ஜெர்சி பகுதிகளில் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரத்தை பிரதிபலிப்பதாகவே இது உள்ளது.

ஹிந்து சமூகம், அவர்கள் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் குறித்த புரிதல் அரசு அதிகாரிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும், சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் ஏற்படுத்த எச்.எஸ்.எஸ் அமைப்பு ஹிந்து மதம் குறித்த விழிப்புணர்வு பட்டறைகளை நடத்தத் தயாராக உள்ளது. சமூக நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை, சிறந்த புரிதலை வளர்க்க ஹிந்து சமூகம் அனைவருடனும் இணைந்து ஒன்றாக வேலை செய்யும்’ என தெரிவித்துள்ளது.