ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தற்போது உள்ள 51வது பட்டத்து ஜீயர் பதவிக்கு ஒருவரை அரசே நியமனம் செய்திட ஹிந்து அறநிலையத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தவறான முன்னுதாரணம். துறவி, சன்யாசிகளின் மடங்கள், ஆசிரமங்களுக்கு தகுதியானவர்களை அந்தந்த மடங்களே தேர்ந்தெடுக்கும். அப்படி அந்த மடத்தால் தேர்ந்தெடுக்க முடியாத சூழலில் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மற்ற மடங்கள் அதற்கு வழிகாட்டும். இதுதான் காலம் காலமாக பின்பற்றப்படும் மரபு. இதில் அக்கால அரசர்கள் முதல் கடந்த வாரம்வரை ஆட்சியில் இருந்த தமிழக அரசுவரை யாரும் இதில் தலையிட்டதில்லை. ஒரு மதத்தின் பண்பாட்டில், கலாச்சாரத்தில், பழக்க வழக்கங்களில் அரசுகள் தலையிடுவது முறை அல்ல. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க அரசு தற்போது இந்த சம்பிரதாயங்களில் தலையிட முடிவு செய்திருப்பது துரதிருஷ்டவசமானது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா வெளியிட்டிருக்கும் பதிவில், ‘இந்து விரோத அரசின் முதல் இந்து விரோத செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல், ஆர்ச் பிஷப், பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும்.’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.