‘ஆவாஸ் – எ வாய்ஸ் ஆப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற அமைப்பு, ‘கிரேட் கமிஷன் ஆப் தி மினிஸ்டரிஸ்’ என்ற பின்லாந்தை சேர்ந்த எவாஞ்சலிஸ்ட் மிஷனரி அமைப்பிடமிருந்து ரூ. 2.03 கோடியை சட்டவிரோதமாகப் பெற்று மத மாற்றங்களில் ஈடுபட்டுள்ளது. அந்த அமைப்பு இந்த வெளிநாட்டு நிதியை எப்.சி.ஆர்.ஏ விதிமுறைகளை மீறி பெற்றுள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எப்.சி.ஆர்.ஏ விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (எல்.ஆர்.ஓ) அமைப்பு உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.