தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தமிழக அரசின் சிமெண்ட் ஆலைக்காக, 1996ல் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் சுமார் 600 விவசாயிகளிடம் இருந்து 300 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்குவதாக அரசு அப்போது அறிவித்தது. அரசால் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதை ஆராய்ந்த அரியலூர் சார்பு நீதிமன்றம், 2017ல் ஒரு ஏக்கருக்கு ரூ.1,25,000 மற்றும் தாமத வட்டி சேர்த்து ரூ. 8 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. ஆனால், இன்றுவரை இழப்பீடு வழங்காமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது. 1983ல் அனந்தவாடியில் நிலங்களை கையகப்படுத்திய அரசு சிமென்ட் ஆலை நிறுவனம், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்று அளித்த உத்தரவாதத்தை இதுவரை நிறைவேற்றவில்லை. இழப்பீடு தாமதமானதால் ஏக்கருக்கு ரூ. 30 லட்சத்தை அரசு உடனே வழங்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு சிமென்ட் ஆலையில் நிரந்தர வேலை வழங்க வேண்டும். அரசு இப்படி இழப்பீட்டை வழங்க மக்களை காத்திருக்க வைத்தால் விமான நிலையம் அமைக்க பரந்தூர் மக்கள் எப்படி நிலம் வழங்குவார்கள்? என கேள்வியெழுப்பினார்.