அமெரிக்கா, கலிபோர்னியாவில் வசிப்பவர் பிரபல இருதயநோய் நிபுணர் டாக்டர் ரோமேஷ் ஜாப்ரா. இவர் சமீபத்தில், தன் டிவிட்டர் பக்கத்தில், பாரதத்தில் மத்திய அரசு செயல்படுத்திய புதிய விவசாய சட்டத்தை ஆதரித்து பதிவிட்டார். ஒரு விவசாயியின் மகனாக இருப்பதால் இதன் அருமையை உணர்கிறேன் என கூறிய அவர், விவசாய சட்டத்தை ஆதரித்து ஒரு கார் ஊர்வலத்தையும் ஏற்பாடு செய்தார். இதனை பிடிக்காத காலிஸ்தான் ஆதரவாளர்கள், முதலில் அவருக்கு எதிராக ஆன்லைன் வெறுப்பு பிரச்சாரத்தைத் செய்தனர். பின் திடீரென அவரது வீட்டையும் தாக்கியுள்ளனர். டாக்டர் ஜாப்ராவின் வீட்டின் மீதான இத்தாக்குதலுக்கு பரவலான கண்டனம் எழுந்துள்ளது.