அமேசானின் மூத்த துணைத் தலைவரும், பாரதத்திற்கான தலைவர் அமித் அகர்வாலுடன் மத்திய தகவல் தொடர்பு, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மெய்நிகர் சந்திப்பில் பங்கேற்றார். இதில் டிஜிட்டல் துறை தொடர்பான கருத்துகள் விவாதிக்கப்பட்டன. இந்த சந்திப்புக்குப் பிறகு, அமேசான் இந்தியா, பாரதத்தில் மின்னணு பொருட்களின் உற்பத்தியைத் தொடங்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக ‘அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்’ இங்கு தயாரிக்கப்படும். சென்னையில் பாக்ஸ்கானின் துணை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜி, இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதன் உற்பத்தியைத் துவங்கும் என கூறப்பட்டுள்ளது.