விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது ‘கொரோனா தடுப்பூசி, இலவச ரேஷன் அரிசி, இலவச கழிப்பறை திட்டங்கள், வீடு கட்ட மானியம், எரிவாயு இணைப்பு’ உள்ளிட்ட பல்வேறு மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் நலத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார். மேலும், ‘கூட்டுறவு வங்கி நகைக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாதது, பொங்கல் பரிசுத் தொகுப்பு ஊழல்’ உள்ளிட்ட தி.மு.க அரசின் மக்கள் விரோத செயல்பாடுகலையும் பட்டியலிட்டார். பா.ஜ.க’வால் மட்டுமே திமுக ஊழலைத் தட்டிக்கேட்க முடியும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக.,வுக்கு மாற்று பா.ஜ.க தான் என்றும் கூறினார்.