விமான டாக்ஸி

பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், பாரதத்தின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹிந்துஸ்தான் – 228 (விடி – கே.என்.ஆர்) விமானத்தின் நில ஓட்டம், குறைந்த வேக ஓட்ட சோதனைகளை (எல்.எஸ்.டி.டி) வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஹிந்துஸ்தான்- 228 என்பது வி.ஐ.பி போக்குவரத்து,  பயணிகள் போக்குவரத்து, விமான ஆம்புலன்ஸ், பாரா ஜம்பிங், வான்வழி கண்காணிப்பு, புகைப்படம் எடுத்தல், சரக்கு பயன்பாடுகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட பலவகை பயன்பாட்டு விமானமாகும். ‘இது பாரதத்தின் முதல் சிவில் விமானத்திற்கான மைல்கல். பிராந்திய விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கியப் படி. தனியார் விமான ஆபரேட்டர்கள், மாநில அரசுகள் இதனை தங்கள் உள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பு, பயிற்சி, பராமரிப்பு, தளவாட போக்குவரத்து என பலவகைகளில் பயன்படுத்த  முடியும்.’ என்று எச்.ஏ.எல் துணைக்கருவிகள் வளாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஜல் பிரகாஷ் கூறினார்.