இஸ்ரோவின் முக்கிய ராக்கெட் தொழில்நுட்பத்தை, வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக, 1994ல் வழக்கு தொடரப்பட்டது. இதனால், விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை, சி.பி.ஐ விசாரித்தது. நம்பி நாராயணன் குற்றமற்றவர் என தெரிவித்து அவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தவறு செய்த காவல் அதிகாரிகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு, தன் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் குறித்து விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐக்கு உத்தரவிட்டது.