உள்நாட்டிலேயே உற்பத்தி (மேக் இன் இந்தியா) அதன் மூலம் தன்னிறைவு – சுயசார்பு (ஆத்மநிர்பர்) என்ற முயற்சிகள் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில், கான்பூர் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் நூற்றுக்கு நூறு உள்நாட்டிலேயே குஜராத் மாநில சாவலி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு கடந்த வாரம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சோதனை ஓட்டத்திற்கு ஒப்படைக்கப்பட்டன. இதனை ஆல்ஸ்தாம் என்ற பிரெஞ்சு நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம் எல்&டியுடன் இணைந்து உ.பியின் லக்னோ, சென்னை உட்பட பல மாநகர மெட்ரோக்களுக்கும் ரயில் பெட்டிகளை வழங்கியுள்ளது.
படிப்படியாக தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, இப்பொழுது ஓட்டத்திற்கு தயாராக உள்ள பெட்டிகள், ஏரோடைனமிக் இன்ஜின்கள், ஸ்டீல் பெட்டிகள், எரிபொருள் சிக்கனம், கூடுதல் வேகம், வசதியான இருக்கைகள், நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கும் விசாலமான இடைவெளிகள், பாதுகாப்பு, குறைந்தளவு சுற்றுச்சூழல் பாதிப்பு என்று பல பாராட்டத்தக்க அம்சங்களுடன் உள்ளன.
உரிய காலத்தில் ஒப்புக்கொண்ட விலையில் திட்டங்களை நிறைவு செய்வதால், இந்நிறுவனம் உ.பியின் ஆக்ராவிலும், கோரக்பூர், பிரயாக்ராஜ், ஜான்சி போன்ற நகர மெட்ரோ இரயில் திட்டங்களிலும் பணியாற்ற உள்ளது. கொடுத்து வைத்த உ.பி. அங்கு தொலைநோக்கு பார்வைக் கொண்ட உண்மையான விடியலைத் தரும் முதல்வர் வாய்த்திருக்கிறார்.