உலகின் மிகப் பெரிய மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பு (ஏ.பி.வி.பி) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில், ‘மாணவர்களும் இளைஞர்களும் கொரோனா நோய் தொற்று தீவிரமடைந்து வரும் இந்த வேளையில் தன்னார்வமாக இரத்த தானம் செய்ய முன் வர வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாக பணியாற்றிட முன்வர வேண்டும். அதற்கான விவரங்களை 8883806221 என்ற எண்ணில் பெறலாம். மேலும் கல்லூரி மாணவர்கள், கல்வித்துறை குறித்த சந்தேகங்கள் ஆலோசனைகளுக்கு மேற்கண்ட எண்ணிற்கு அழைக்கலாம். மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மாணவர்களும் இளைஞர்களும் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்திட வேண்டும். ஏ.பி.வி.பி சார்பாக தமிழகம் முழுவதும் கபசுர குடிநீர் வழங்கல், முகக் கவசம் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல், ரத்ததான முகாம்கள், உணவு பொட்டலங்கள் வழங்கல், இலவச டியூஷன், இலவச ஆன்லைன் வகுப்புகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.