பாரதத்தில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக மதமாற்றத்தில் ஈடுபடும் சுவிசேஷ மிஷனரி அமைப்புகளில் பல இதற்காக மத்திய அரசின் வெளிநாட்டு நிதி சட்டத்தை மீறி வெளி நாடுகளில் இருந்து முறைகேடாகவும் சட்ட விரோதமாகவும் பணம் பெறுகின்றன. இது குறித்து ஆராயும், கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (எல்.ஆர்.ஓ), சட்டவிரோத மதமாற்றங்கள் செய்ய வெளிநாட்டு நிதியை பெற்றதாக பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த ‘பெங்கால் பாப்டிஸ்ட் பெல்லோஷிப்’ என்ற மிஷனரி மீது புகார் அளித்துள்ளது. இந்த அமைப்பு, அமெரிக்காவை சேர்ந்த ‘கம்பஷன் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பின் பினாமி போல செயல்பட்டு குழந்தைகள், கர்ப்பிணி பெண்களை குறிவைத்து சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திற்கும் எல்.ஆர்.ஓ புகாரளித்துள்ளது.