மும்பையில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார், சமீபத்தில் பிடிபட்டது. இதனை முறையாக விசாரிக்கவில்லை என கூறி, மும்பை நகர போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், சமீபத்தில் ஊர்க்காவல் படை தலைவராக மாற்றப்பட்டார். பரம்வீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், காவல் துறையில், உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அனில் தேஷ்முக்கின் தலையீடு அதிகம் உள்ளது. மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான விடுதிகளில் இருந்து, மாதம் தோறும், ரூ.100 கோடி வசூல் செய்து தரும்படி நிர்ப்பந்தித்தார்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இவ்வழக்கை விசாரிக்க, பணி நிறைவுப் பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. முற்றும் இந்த மோதல், ஆட்சியையே கவிழ்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.