நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்த முயன்று தோற்றுப்போய் இன்றுவரை பாரதத்திலேயேஆணியடித்து அமர்ந்திருக்கும் கமலஹாசன், ஷாருக்கான் போன்ற நடிகர்கள் வரிசையில் உள்ள மற்றொருவர் அமீர்கான். கடந்த 2015ம் ஆண்டு ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய அமீர்கான், “நான் வீட்டில் என் மனைவியும் வீட்டில் பேசும்போது நாம் பாரதத்தை விட்டு வெளியேற வேண்டுமா? என்று என் மனைவி கேட்கிறார். அவர் தன் குழந்தைக்கு பயப்படுகிறார், எங்களை சுற்றியுள்ள சூழல் என்னவாக இருக்கும் என்று பயப்படுகிறார்” என கூறியது நினைவிருக்கலாம். அவர் தனது திரைப்படங்களில் தொடர்ந்து ஹிந்து விரோத கருத்துகளை பரப்பி வருபவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், தற்போது அவரது படம் ‘லால் சிங் சத்தா’ வெளியாக உள்ள நிலையில்,மக்கள், அமீர்கானின் நாட்டைவிட்டு வெளியேறும் கருத்துகளை சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. மேலும், ‘பாய்காட் லால்சிங் சத்தா’ , #BoycottLaalSinghChaddha போன்ற ஹேஷ்டேக்குகளையும் மக்கள் பிரபலமாக்கினர். அது டுவிட்டரில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இதையடுத்து எங்கே தனது பட வியாபாரம் படுத்து விடுமோ என பயந்த அமீர்கான், “நான் நாட்டை மிகவும் நேசிக்கிறேன், நான் அப்படி இல்லை என்று உறுதியளிக்கிறேன். சிலர் அதை தவறாக உணர்ந்தால் அது துரதிர்ஷ்டவசமானது. எனது படத்திற்கு நியாயமான வாய்ப்பை வழங்குங்கள். எனது படங்களைப் புறக்கணிக்காதீர்கள், தயவுசெய்து எனது படங்களைப் பாருங்கள்” என்று கூறி வருகிறார். இதனிடையே, டாம் ஹாங்க்ஸ் நடித்த ஹாலிவுட் கிளாசிக் படமான ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ என்ற திரைப்படத்தின் நகல், அந்த பட்த்தை அமீர் கான் கெடுத்து விட்டார் என விமர்சிக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.