ஹிந்துக்களை கடத்தித் தாக்கிய முஸ்லிம் கும்பல்

மத்தியப் பிரதேசத்தின் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பள்ளி ஆய்வக ஆசிரியர் மற்றும் இந்து ஆண் மாணவர் ஒருவருடன் ஒரு முஸ்லிம் பெண் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதைப் பார்த்த ஒரு முஸ்லிம்கள் குழு, அந்த முஸ்லிம் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டதுடன், ஹிந்து நபர்களை கான்ஷாவல்லி பகுதியில் உள்ள தர்காவிற்கு அருகில் உள்ள ஒரு இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கினர். நல்ல வேலையாக இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு சென்ற காவலர்கள் கடத்தப்பட்ட இருவரையும் அந்த பெண்ணையும் காப்பாற்றினர். அந்த பெண் மற்றும் கடத்தப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இதில் ஈடுபட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 16 பேரில் முகமது இர்பான் மற்றும் அசார் அலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கஹர்வாடி வார்டு கவுன்சிலர் அஷ்பக் சிகாட் தலைமையில் முஸ்லிம் கும்பல் ஒன்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுவிக்கக் கோரி வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டது. அவர்கள் காவல் நிலையம் மீது கற்களை வீசி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, காவலர்கள் லேசான பலத்தை பயன்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும், நகரின் முக்கியமான பகுதிகளில் காவலர்கள் நிறுத்தப்பட்டு, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வதந்திகளுக்கு யாரும் செவிசாய்க்க வேண்டாம். சமூகத்தை தொந்தரவு செய்பவர்கள் இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி நிச்சயமாக நகரத்தின் சூழலைக் கெடுக்க முயற்சிசெய்வார்கள். காவல்துறை உங்களுடன் இருக்கிறது. யாராவது சட்டத்தை கையில் எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் சத்யேந்திர குமார் சுக்லா கூறியுள்ளார். தற்போது அங்கு நிலைமை அமைதியாக உள்ளது.