உத்தரகாண்டில் ஒரு லவ்ஜிஹாத்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து ஒரு லவ்ஜிஹாத் நடத்தும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மே 18 அன்று, ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியதாக முகமது இக்லாஷை கோட்வாலி காவல்துறையினர் கைது செய்தனர். அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட பெண் 2019ல் ஆன்லைனில் இக்லாஷை சந்தித்தார். இக்லாஷ் ஒரு ஹிந்து பெண்ணை கவர தன்னை மனோஜ் என்ற பெயருடைய ஹிந்துவாக காட்டிக்கொண்டார். ஜிடி கோயங்கா பல்கலைக் கழகத்தில் படிப்பதாக அவரிடம் கூறினார். கல்லூரி முடித்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். இதனிடையே அந்த பெண்ணை இக்லாஷ் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார். பின்னர், அந்த பெண்ணின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறிக்க மிரட்டினார் இக்லாஷ். தொடர்ந்து அவ்வப்போது பணம் பறித்து வந்தார். செப்டம்பர் 2020ல், அந்த பெண் சந்தேகமடைந்து, உண்மையைக் கண்டறிய இக்லாஷை சந்தித்தார். அவர் அந்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, தனது உண்மையான பெயர் பதிந்திருந்த தனது ஐடி கார்டைக் காட்டினார். எனினும், இக்லாஷ் அந்த பெண்ணின் பாலியல் வீடியோக்களை வைத்திருந்ததால், அவற்றை ஆன்லைனில் வெளியிடுவதாக கூறி தொடர்ந்து மிரட்டி வந்தார். கடைசியில் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அந்த பெண், இக்லாஷ் தன்னிடம் இருந்து சுமார் ரூ. 5 லட்சம் பெற்றதையும் அவர் செய்த கொடுமைகளையும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தில் உள்ள ஹதீன் காலனியில் மறைந்திருந்த முகமது இக்லாஷை கடந்த மே 19 அன்று காவல்துறையினர் கைது செய்தனர். அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.