பீகார் மாநிலம் தாஜ்பூரை சேர்ந்த முகமது இஜர் என்ற முஸ்லிம் நபர், தன்னை ராகேஷ் சிங் என்ற ஹிந்துவாக அடையாளப்படுத்திக்கொண்டு மேற்குவங்கத்தை சேர்ந்த ஹிந்து பெண்ணிடம் பழகி தனது லவ்ஜிஹாத் வலையில் வீழ்த்தினார். பின்னர் அந்த பெண்ணை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து வலுக்கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்தார். சுஃபியா காதுன்’ என்ற புதிய பெயரை அந்த பெண்ணுக்கு வைத்தார். பின்னர் தான் முகமது இஜர் ஏற்கனவே திருமணமானவர் இரண்டு குழந்தைகளின் தந்தை என அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண் மேற்கு வங்கத்தில் உள்ள தனது தாயாருடன் தொலைபேசியில் பேசி தான் லவ்ஜிஹாத்தால் ஏமாற்றப்பட்ட சம்பவம் குறித்து தெரிவித்தார். அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் வி.ஹெச்.பி உறுப்பினர்களை தொடர்பு கொண்டு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய உதவினர். பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் வி.ஹெச்.பி உறுப்பினர்களால் சமஸ்திபுராவிற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு மேற்கு வங்கத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இதேபோன்ற வழக்கு மாநிலத்தின் பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது. அங்கு ஒரு ஹிந்து பெண் ஜூலி குமாரியை லவ்ஜிஹாத் திருமணம் செய்வதற்காக தௌஃபிக் என்ற முஸ்லிம் நபர் ராஜ் ராஜ்புத் என்ற ஹிந்துவாக நடித்தார். பின்னர் ஜூலி யதார்த்தத்தை அறிந்துகொண்டார். தௌஃபிக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயது மகள் இருப்பதை தெரிந்து அதை எதிர்த்து கேள்வி கேட்டபோது வாயை மூடிக்கொண்டு அமைதியாக வாழ வேண்டும், முஸ்லிம்மாக மதம் மாற வேண்டும் என அந்த ஹிந்து பெண்ணை கட்டாயப்படுத்தினார் தௌபிக்.