அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இட நெருக்கடி காரணமாக சில மாணவர்கள் பட்டமளிப்பு அரங்கில் அமர முடியாமல் பக்கத்து அறைகளில் அமர்ந்திருந்தனர். இதை அறிந்த பிரதமர் மோடி, அங்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். மாணவர்கள் பிரதமரின் பண்பைக் கண்டு நெகிழ்ந்தனர். “பிரதமர் நரேந்திர மோடியின் பண்பும் பணிவும் ஒவ்வொரு அரசியல் தலைவருக்கான பாடம்” என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.