நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினரான அர்விந்த் விர்மானி, பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளிக்கையில், “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் வங்கிகள் பிரச்சனைகள் காரணமாக பாரதத்தின் நிதித்துறையில் பெரிய தாக்கங்கள் ஏற்படும் என நான் கருதவில்லை. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் காரணமாக நடப்பு நிதியாண்டில் பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த எனது கணிப்பை 0.5 சதவீதமாக குறைத்துள்ளேன். எனவே அது 6.5 சதவீதம் இருக்கலாம். 0.5 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக இருக்கலாம். பணவீக்க இலக்கை கொண்டு இருக்கும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் போன்றே நாம் இருக்க வேண்டும். அதே நேரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் எந்த நாடும் சீனாவின் வர்த்தக கொள்கைகளை பின்பற்றுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நியாமற்ற வர்த்தக கொள்கைகள் இல்லாமல் இருந்திருந்தால், சீன வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு நடந்தே இருக்காது என்பதே என் கணப்பு. பாரதம் சமச்சீரற்ற கொள்கைகளை பின்பற்றவில்லை. நியாயமற்ற வர்த்தக கொள்கையை பின்பற்றியே நாம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வளர்ச்சியை அடைய முடியும். பாரதத்தின் வளர்ச்சி விகிதம் 6.3 முதல் 6.4 சதவீதத்திற்கு இடையில் இருக்கும் என அண்மையில் உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் தெரிவித்திருந்தன. சர்வதேச நாணய நிதியமும், நடப்பு நிதியாண்டில் பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.1ல் இருந்து 5.9 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் பாரதம் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக தொடர்ந்து உள்ளது” என தெரிவித்தார்.