தாராபுரத்தில் தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே அனுப்பபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்க வந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைசெய்தியாளர்களிடம் பேசுகையில், “சிதம்பரம் கோயில் தீட்சிதர் சிறுமியின் பாலிய விவாக திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறோம்.சிதம்பரம் கோயில் குறித்து பல ஆண்டுகளாக பேசி வருகிறோம்.ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சியோடு சிதம்பரம் கோயிலையும், அங்குள்ள தீட்சிதர்கள் குறித்தும் தி.மு.க அரசு தவறான முறையில் அணுகிக் கொண்டுள்ளது.சிதம்பரம் கோயில், 1952ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினமும் பிரச்சனையை எழுப்புகிறது.இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு விசாரணை குழு அமைத்து, உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும்” என்றார்.திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட மூத்த நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.